கொதித்துக் கொண்டிருந்த குழம்பு பாத்திரத்தில் தவறி விழுந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை நாட்டில் அங்குணகொளபெலசவில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் இருந்தார். இதனை அடுத்து அவருடைய தூக்கு தண்டனை 25 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டு தீர்ப்பு விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வருகிற 2028 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட இருந்தார். இந்த நிலையில் சென்ற வாரம் சிறைச்சாலையில் சமையலறை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த கைதி மேலே உள்ள ஒரு பாத்திரத்தை எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது கால் தடுமாறி கோழி குழம்பு கொதித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய சமையல் பாத்திரத்தில் அவர் விழுந்துள்ளார். இதில் அந்த கைதியின் உடல் முழுவதும் வெந்து போனது. உடனடியாக ஜெயில் காப்பாளர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த கைதி பத்து நாட்களுக்குப் பின் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.