சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளராக திமுக எம்.பி. மு.க.கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ். பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர். திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் தேர்வாகி இருக்கிறார். மேலும், தணிக்கை குழு உறுப்பினர்களாக பிச்சாண்டி, முகமது சகி, சரவணன், வேலுச்சாமி ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர்.
திமுக பொதுக்குழுவிற்காக அசைவம் முதல் சைவம் வரை பல உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: பலாகாய் பிரியாணி, முட்டை, கத்திரிக்காய் பச்சடி, தயிர் பச்சடி, ரசம் பாத், உருளை வறுவல், பகாளாபாத், ஆரஞ்சு ஐஸ்கிரீம், வாழைப்பழம், விருதுநகர் பரோட்டா, உருளை பட்டானி காரகறி, ஊட்டி கத்தரிக்காய் சாப்ஸ், சின்ன வெங்காயம் அரைத்துவிட்டு உள்ளிதீயல் சாதம், கேரளா கீ சாதம், லெமன் சாதம், தூதுவளை ரசம் சாதம் என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. ஆற்காடு மக்கன் பேடா, கல்கத்தா ஸ்வீட் பீடா, திருவையாறு அசோகா அல்வா, ஊட்டி கத்திரிக்காய் சாப்ஸ், கேரளா பாலாடை பிரதமன், விருதுநகர் பரோட்டா என உணவு வகைகள் தடல்புடல் . இப்படி பல ஊர்கள்ல இருந்து திமுகவின் இன்றைய பொதுக்குழு கூட்டத்துக்கு ஸ்பெஷல் சாப்பாடு ஐட்டம் எல்லாம் வந்திருக்கு.