Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கவுந்தப்பாடி ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் நீள்நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒன்பதாம் ஆண்டு தேர் திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முளைப்பாலிகை இடுதல், காப்பணிதல், 1008 வேள்வி வழிபாடு கோவிலில் நடைபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இடப வாகனத்தில் சோமாசுக்கந்தர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். இதனை அடுத்து திருக்கல்யாணமும், தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |