சபர்மதி ஆசிரமம் வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அங்குள்ள ராட்டை சுற்றி மகிழ்ந்தார்.
முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து , கைகுலுக்கி வரவேற்றார். இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து விரைந்த ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார். அவரை பிரதமர் மோடி சால்வை அனுவித்து வரவேற்றார். ட்ரம்ப் மற்றும் மெலனியாவுக்கு மோடி கதர் ஆடை வழங்கினார்.பின்னர் காந்தி போட்டோவுக்கு மோடி ,ட்ரம்ப் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். அங்கிருந்த ராட்டை மனைவியுடன் ட்ரம்ப் சுற்றி ரசித்தார்.
#WATCH US President Donald Trump and First Lady Melania Trump spin the Charkha at Sabarmati Ashram. PM Modi also present. #TrumpInIndia pic.twitter.com/TdmCwzU203
— ANI (@ANI) February 24, 2020