Categories
சென்னை மாநில செய்திகள்

திடீரென எமனாக வந்த பைக்…. தாயும் 6 மாத குழந்தையும் பலி…. சென்னையில் காலையிலேயே சோக சம்பவம்….!!!!

சென்னையில் பைக் மோதி தாயும் கைக்குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று அதிகாலை பூங்குழலி என்ற பெண் தனது ஆறு மாத குழந்தையுடன் அமந்தங்கரை அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் பூங்குழலி மீது வேகமாக மோதியுள்ளார். இதில் பூங்குழலையும் அவரது குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போதையில் இருந்த அந்த இளைஞரையும் அவருடன் பின்னால் அமர்ந்திருந்த இளம் பெண்ணையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சென்னையில் அதிகாலையிலேயே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது m

Categories

Tech |