Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் மூலம் டெய்லரிங் ஆர்டர்”….. ரூ.10 கோடி மோசடி செய்த தம்பதி…..போலீஸ் அதிரடி….!!!

10 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 1 1/2 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் திவாகர்- வைஷ்ணவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடை தைக்கும் நிறுவனர் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம்  கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் துணிகளை கொடுத்து தம்பதியினர் தைத்து வாங்கியுள்ளனர். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் திவாகர் மற்றும் வைஷ்ணவி மீது சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தைத்த துணிகளுக்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதும், பலரிடம் கட்டிங் மெஷின் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததும் உறுதியானது. இவர்கள் சுமார் 400 பேரிடம் இருந்து 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். திவாகரை போலீசார் ஏற்கனவே கைது செய்து அவர் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். வைஷ்ணவி கடந்த 1 1/2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் வைஷ்ணவியை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Categories

Tech |