கேஸ் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள டொனக்கல் நகரில் கிரீஸ்லோவ் என்னும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கார்களுக்கு கேஸ் நிரப்பும் நிலைய கட்டிடத்தில் தபால் நிலையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முன்தினம் மாலை இந்த கேஸ் நிலையம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கேஸ் நிலையத்தில் பயங்கர தீவிபத்து நேரிட்டது. இதில் கேஸ் நிலைய கட்டிடத்தில் பெரும் பகுதி இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. கார்களில் கேஸ் நிரப்ப காத்திருந்தவர்களும் தபால் நிலையத்தில் இருந்தவர்களும் இடுப்பாடுகள் சிக்கிக் கொண்டனர்.
மேலும் இந்திர பயங்கர விபத்தில் கேஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இந்த ஈடுபாடுகளில் சிக்கி பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் காயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அங்கு உள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த ஈடுபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக தெரிகின்றது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இடுப்பாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கேஸ் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி அவர் பேசும்போது இது டோனக்கல் மற்றும் முழு நாட்டிற்கும் கருப்பு நாள் இந்த துக்ககரமான உயிரிழப்பை கண்டு கிரேஸ் கிலோவில் உள்ள மக்களை போலவே இந்த நாடு முழுவதும் மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர் என கூறியுள்ளார்.