Categories
உலக செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக மீண்டும் வடகொரியா ஏவுகணை வீச்சு…? ஜப்பான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!!!!

தென்கொரியாவின் கங்னியுங் நகரில் அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டது தென்கொரியாவும் தன்னுடைய பங்கிற்கு இரண்டு சோதனைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இருப்பினும் அந்த நாட்டின் ஹியூமூ-2 என்னும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் வடகொரியா நேற்று முன்தினம் அடுத்தடுத்த இரண்டு குறுகிய தொலைவு  பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

இதில் முதல் ஏவுகணை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 100 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்று 350 கிலோமீட்டர் தொலைவிற்கு பறந்துள்ளது. மேலும் இரண்டாவது ஏவுகணை 50 கிலோமீட்டர் உயரத்திற்கு சென்று 800 கிலோமீட்டர் தொலைவிற்கு பறந்துள்ளது. இந்த நிலையில் வடகொரியா எல்லையில் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதன் காரணமாக மூன்று நாடுகளையும் அச்சுறுத்தும் விதமாக அடுத்தடுத்து வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதியிலிருந்து ஆறு முறை ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே ஜப்பானை நோக்கிய திசையில் வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அளிக்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை மீண்டும் வடகொரியா பரிசோதித்திருப்பது பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் வடகொரியாவின் இந்த செயல் சட்ட விரோதமானது என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இது பற்றிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தென்கொரியா மற்றும் ஜப்பான் உடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இந்த சூழலில் வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் என்று கூறியுள்ளது இதனால் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ளது.

Categories

Tech |