Categories
சினிமா தமிழ் சினிமா

“அர்னவ் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”….. கண்ணீர் மல்க நடிகை திவ்யா பேட்டி…!!!!

சின்னத்திரை நடிகையான திவ்யா தனது காதல் கணவரான சின்னத்திரை நடிகர் அர்னவ் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். மூன்று மாத கர்ப்பிணியான தன்னை, மற்றொரு நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடித்து காயப்படுத்தி விட்டதாக கீழ்பாக்க அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்துஅரனவ் மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி புகார் அளித்து வருகிறார். இருப்பினும் திவ்யவுடன் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய திவ்யா,‌ அர்னவ் அளித்த புகாரின் படி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு திடீரென வேல்லப்பன் சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நண்பர்களுடன் சென்று மீண்டும் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு வெளியே வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார். நான் முஸ்லிமாக மதம் மாறிய பின்னரே திருமணம் செய்து கொண்டார். இதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து என்னுடன் ஒரே வீட்டில் 45 நாட்கள் பேசாமல் இருந்தார். எனது செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டார். எனது உடல் நலம் சரியான உடன் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுவேன். இது குறித்து அர்னவின் பெற்றோர் கேட்க வேண்டும். அவர்களது குடும்ப வாரிசு எனது வயிற்றில் வளர்கிறது. தற்போது டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்றேன். குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்தனர் என்று அவர் கூறி விட்டு காரில் புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் நேற்று தனது மனைவி திவ்யா மனநல ஆலோசகரியிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கான மருத்துவ சீட்டையும், அவர் தனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சியும் அர்னவ் வெளியிட்டார். அதில், திவ்யா, அர்னவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியும் சண்டையிடும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. கணவன் மனைவி இருவரும் மாறி மாறி ஒருவர் மீது புகார்களை கூறி வருவதுடன் தங்கள் தரப்பில் உள்ள ஆதாரங்களை வெளியிட்டு வருவது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |