Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் அதை செய்யப்போகும் நயன்தாரா…. செம ஹேப்பியில் விக்கி… அதுக்கு இதுதான் காரணமாம்….!!!!!

திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ள காட்ஃபாதர் என்ற படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு இந்த படம் வெற்றி பெற்றதால் நயன்தாரா மகிழ்ச்சியில் உள்ளாராம். இதற்கிடையில் நடிகை நயன்தாரா புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள மறுத்து வருவதாக தகவல் வெளியானது.

தன்னுடைய கணவர் விக்னேஸ் சிவனுடன் மட்டுமே இணைந்து திரைப்படங்களை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம். நயன்தாரா இப்படி முடிவு எடுத்ததற்கு காரணம் அவர் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பதுதான் ஏன்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இவரின் இந்த முடிவால் கணவர் விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் மற்றும் நயன்தாரா குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது.

Categories

Tech |