Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ்…. எப்போது தெரியுமா….?ட

நடிகர் சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் ஓடிடி வெளியிடும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து உருவாக்கிய திரைப்படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இந்தத் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். மேலும் டெல்லியில் கணேஷ், ராதிகா, சித்திக் மற்றும்  நிரஜ் மாதவ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை  போடுகின்றது. மேலும் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் டிஃபரண்டான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இந்தப் திரைப்படத்தில் தாமரை எழுதிய பாடல் வரிகளில், மதுஸ்ரீ குரலில் வெளியான “மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருவதுடன் ரில்ஸ் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 21ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திரையரங்குகளில் வெளியாகி  15 ஆம் தேதியுடன் ஒரு மாதம் நிறைவடைவதை முன்னிட்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |