Categories
அரசியல்

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை : சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32,800க்கு விற்பனை!

வரலாறு காணாத காணாத அளவு தங்கம் விலை உயர்ந்து 33,000ஐ நெருங்குகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், இந்தியாவில் தொழில்துறை தேக்கம் போன்ற காரணங்களால் கடந்த 3 மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இருப்பினும் பின்னர் சற்று நிலைமை சீரடைந்து வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. குறிப்பாக உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி – இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி சர்வதேசப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,464 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை உயந்து ஒரு கிராம் ரூ.4,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.52.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |