Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பேரிடர் கால நண்பன் பயிற்சி”…. சமூகத் தன்னார்வலர்களுக்கு அவசரக்கால உதவி உபகரணங்கள்….!!!!!

பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி உபகரணங்களை வழங்கினார். இதன் பின் அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் 3500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு மூன்று நாட்கள் பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி வழங்கப்படுகின்றது.

இதில் மொத்தம் 200 சமூக தன்னார்வலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வழங்கப்பட்டிருக்கின்றது. இப்பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பருவ காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இருக்கின்றார்கள். மாவட்ட நிர்வாகத்தோடு நீங்கள் இணைந்து பணியாற்ற உள்ளீர்கள். மக்களுக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் பயிற்சியினை செயல்படுத்த வேண்டும். பேரிடர் காலங்களில் முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமத்திற்குள்ளாவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும். மேலும் வீட்டைவிட்டு வெளியேறும் பொதுமக்களிடம் ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வருமாறும் அறிவுறுத்த வேண்டும். பேரிடர் காலத்தில் உங்களின் பங்கு உதவிகரமாக இருக்கும்” என பேசி உள்ளார்.

Categories

Tech |