தனியார் மில் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொளப்பலூரில் இருக்கும் தனியார் மில்லில் கிருஷ்ணமூர்த்தி உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் 5 லட்ச ரூபாயை இழந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியிடம் புலம்பியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தோட்டத்திற்கு சென்ற வருவதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
பின்னர் அங்குள்ள மரத்தில் கிருஷ்ணமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த கீதா அங்கு சென்று பார்த்தபோது தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.