Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த போலீஸ்காரர்கள்…. அதிரடி நடவடிக்கையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

வாகன ஓட்டிகளிடமிருந்து பணம் வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இரண்டு போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மதுபான கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை தடுக்க மதுவிலக்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த தாமஸ்முருகன், போலீஸ்காரர் அருண் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளிடமிருந்து பணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. இந்த புகார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏட்டு தாமஸ் முருகனையும் போலீஸ்காரர் அருணையும் பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |