தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள எருமாடு பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்துக் வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தன்னுடன் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஒருவரின் 16 வயது மகளிடம் மகேந்திரன் பேச்சு கொடுத்து பழகியுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திருமணமானதையும் மறைத்து கடந்த 2018-ஆம் ஆண்டு மகேந்திரன் சிறுமியை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சூலூருக்கு கடத்தி சென்றுள்ளார்.
இதனை அடுத்து சிறுமியை அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு திருப்பூருக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஊட்டி மகளிர் நீதிமன்றம் மகேந்திரனுக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.