Categories
சினிமா தமிழ் சினிமா

“பெருமைமிகு பெற்றோர்கள்”…. ஜெயம் ரவி, மோகன் ராஜாவிற்கு குவியும் பாராட்டுகள்….!!!!!!

இயக்குனர் மோகன் ராஜாவின் ட்விட்டர் பதிவிற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான மோகன் ராஜா தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தொடர் தோல்விகளை சந்தித்த சிரஞ்சீவிக்கு காட்பாதர் திரைப்படம் வெற்றியைத் தந்துள்ளது. இதுபோல இவரின் தம்பியான பிரபல முன்னணி நடிகரான ஜெயம் ரவி அருள்மொழிவர்மனாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அண்மையில் வெளியானது.

இத்திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. இந்த நிலையில் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தை மோகன் மற்றும் தாய் இருவரும் பொன்னியின் செல்வன் மற்றும் காட்பாதர் திரைப்படங்களின் விளம்பர பதாகைகளின் முன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு பெருமைமிகு பெற்றோர்கள் என குறிப்பிட்டு இருக்கின்றார். இதை ஜெயம் ரவியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். இருவருக்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றார்கள். அதன்படி பிரபல நடிகை ஜெனிலியா தனது ட்விட்டர் பக்கத்தில் உங்கள் இருவரையும் நினைக்கும்போது பெருமையாக இருக்கின்றது என குறிப்பிட்டு இருக்கின்றார்.

 

Categories

Tech |