Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…..‌ பொதுத்துறை வங்கியை ஏலத்தில் விட முடிவு…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் வாரா கடன் அதிகமாக இருக்கும் வங்கிகளை தனியார் மையம் ஆக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அந்த வகையில் ஐடிபிஐ வங்கியின் கடன் அளவு அதிகமாக இருந்தது. இதனால் இந்த வங்கியானது ரிசர்வ் வங்கியின் பிசிஏ எனும் உடனடி திருத்த நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. தற்போது வங்கியின் நிதிநிலைமை சரியானதை தொடர்ந்து வங்கியில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கும், நிர்வாக கட்டுப்பாட்டை மாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியின் விற்பனை நடப்பு நிதி ஆண்டில் முடிவடைந்தால் தன்னுடைய பங்குகளின் விற்பனை மூலம் திரட்ட இருக்கும் 65,000 கோடிக்கு பங்களிப்பு செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக 24, 544 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி நிறுவனம் வைத்துள்ள, 49.24 சதவீதம் பங்குகளில், 30.20 சதவீதம் பங்குகளை விற்பனை செய்கிறது. அதன் பிறகு மத்திய அரசுக்கு சொந்தமான 45.48 சதவீதம் பங்குகளில், 30.48 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதில் 5.28% பங்குகள் பொதுமக்களிடம் இருக்கிறது. எனவே வாய்ப்பு இருக்கும் விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 16-ஆம் தேதி வரை தங்களுடைய ஏலங்களை சமர்ப்பித்து கொள்ளலாம். அதன் பிறகு ஏலம் எடுக்கும் நிறுவனமானது குறைந்தபட்சம் 22,500 கோடி ரூபாயை நிகர தொகையாக வைத்திருக்க வேண்டும். மேலும் ஐடிபிஐ வங்கியை ஏலத்தில் எடுப்பதற்கு வெளிநாட்டு வங்கிகள், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாத வங்கிகள் மற்றும் செபியில் முதலீடு செய்யப்பட்ட மாற்று முதலீட்டு பண்டுகள் போன்றவைகளும் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |