Categories
உலக செய்திகள்

தமிழ் சினிமா பாணியில் கடத்தப்பட்ட போதை பொருள்…. வித்தியாசமான காட்சியை கண்ட அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

பிரிட்டன் நாட்டில் வேல்ஸ் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் தமிழ் சினிமா பாணியில் கடற்படை அதிகாரிகளிடம் சிக்காமல் போதை பொருள் கடத்தல் நடைபெற்றுள்ளது. அதாவது பிளாஸ்டிக் கேன்களுடன் இணைக்கப்பட்ட கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் பவுடர் மறைக்கப்பட்டிருப்பதை கடற்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் பவுடரை அடைத்து பார்சல் செய்து அதனை பிளாஸ்டிக் கேன்களுடன் இணைத்த படி கடற்கரை ஓரத்தில் ஒதுங்கி கிடந்துள்ளன.

இதனைப் பார்த்தவுடன் சந்தேகித்த அதிகாரிகள் அவற்றை சோதனை செய்துள்ளனர். மேலும் அதில் கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் யாரோ இதை வித்தியாசமான முறையில் கடத்த முயற்சித்து இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். இதே போன்று பல இடங்களில் பொட்டலங்களை கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அவற்றை கண்டால் தொட வேண்டாம் எனவும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |