மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
மன்னன் ராஜராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவரா? சைவமா? வைணவமா? என பல தரப்பில் இருந்து பல கருத்துக்கள் வெளியாகி விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக நிர்வாக சிந்தனையில் கவனம் செலுத்தாமல் பின்னோக்கிச் சென்று வரலாற்றை சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் மீண்டும் பேசி சர்ச்சைக்குரிய ஒன்றாக உருவாக்குவது நியாயமா?
விலங்கினமாக இருந்த இனம் இரு கற்களை உரசி தீப்பொறி உருவாகுவதை கண்டுபிடித்ததில் இருந்து சக்கரங்கள், உலோகங்கள் என அன்றாட கண்டுபிடிப்புகளுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் நீண்டு சென்று கொண்டே இருக்கின்றது. அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஆலிஸ் என பெயரிடப்பட்ட உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது. நாளைய மனிதன் விண்வெளிப் பாதைக்கு அமைக்க திட்டமிடும்போது செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என விவாதிக்காமல் உலக அதிசயங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த மாமன்னன் வீரத்தமிழன் ராஜராஜ சோழனின் புகழை உலகில் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.
மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழ் பரப்பவும்! உலகறியச் செய்வோம்!
மாமன்னன் ராஜ ராஜ சோழனின் புகழ் பரப்புவோம்! உலகறியச் செய்வோம்!#rajarajachozhan #tamilking #historical #indusvalleycivilization #evolution #technology #scientific #Development #economy #growth pic.twitter.com/JKwrXBkiRs
— R Sarath Kumar (@realsarathkumar) October 8, 2022