Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கொன்று சாக்கு மூட்டையில் கட்டிய தந்தை….. பிச்சைக்காரர் போல சுற்றி திரிந்தவர் கைது….. பரபரப்பு சம்பவம்…..!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் வ.உ.சி தெருவில் டெய்லரான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் தன்ஷிகா என்ற மகள் இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளிமுத்து தனது மகளை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி மேலூரில் இருக்கும் தனது தனது சகோதரி வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி பிரியதர்ஷினி அங்கு வந்து பார்த்தபோது பரணியில் இருந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வருவது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது பிளாஸ்டிக் வாளியில் அழுகிய நிலையில் தன்ஷிகாவின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி கதறி அழுது போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த பிரேத பரிசோதனை அடிக்கையில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மகளை கொன்று சாக்கு முட்டையில் வைத்து கட்டிவிட்டு காளிமுத்து தப்பிய ஓடியது தெரியவந்தது. இதனை அடுத்து பல்வேறு இடங்களில் போலீசார் காளிமுத்துவை தேடி வந்தனர். பின்னர் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக பிச்சைக்காரர் போல் சுற்று திரிந்த காளிமுத்துவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Categories

Tech |