விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கூலித்தொழிலாளியான துரைப்பாண்டி-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விசாகன்(10) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறுவன் துணி காயப்போடும் கொடி கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறக்கியதால் மூச்சு திணறி சிறுவன் மயங்கி விழுந்து விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி தனது மகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் விசாகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகு தான் விசாகன் பிறந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.