மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமையில் தமிழ் துறை சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சுயநிதி. பிரிவு இயக்குனர் பிரபு, பேராசிரியர் ரஞ்சித் குமார், உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
இந்நிலையில் பாரம்பரிய உணவு திருவிழாவை முன்னிட்டு சந்திரலேகா என்ற மாணவி சவ்மிட்டாய், கமர்கட், சீனி மிட்டாய், புளிப்பு மிட்டாய், சூட மிட்டாய், தேன் மிட்டாய் என்று விதவிதமான மிட்டாய்களை தயார் செய்து வைத்துள்ளார். மேலும் மாணவர் மண்பானையில் பழைய சாதத்தை வைத்து பழங்கால பாரம்பரியத்தை நினைவூட்டினார். மேலும் வெந்தய வடை, வாழைப்பூ வடை என்று மாணவர்கள் விதவிதமாக தயார் செய்து பாரம்பரிய உணவு திருவிழாவில் காட்சிப்படுத்தினர். இதனை அடுத்து தமிழ் துறை தலைவர் பரிமளா நன்றி கூறியுள்ளார்.