Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்… பயங்கர துப்பாக்கிசூடு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காசா முனையிலிருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தப்படும். இதற்கு இஸ்ரேல் படையினரும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்நிலையில், மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரத்தின் அகதிகள் முகாமிற்கு சென்ற இஸ்ரேல் படையினர், முக்கிய குற்றவாளியை தேட அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்டார்கள்.

அந்த சமயத்தில் இஸ்ரேல் படையினரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்தார்கள். இரண்டு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் பலியானதாகவும், 11 நபர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |