தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.அவை தரமற்ற இருப்பதுடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இருப்பதில்லை எனவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது எனவும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் கட்டுப்பாடற்ற பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்யவும்,அதன் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவை பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அரசு உத்தரவிட்டு உள்ளது.
அது மட்டுமல்லாமல் மக்கள் வாழும் பொருட்கள் அனைத்திற்கும் முறையாக பில் வழங்க வேண்டும்.இந்த அறிவுரைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.