பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து நேற்று மாலை 6 மணிக்கு குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் தோவாளை புதூர் அருகே சென்ற போது என்ஜினில் இருந்து புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பெருந்தை நிறுத்திவிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.
இதற்கிடையில் அலறி சத்தம் போட்டபடி பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். பேருந்து இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.