Categories
மாநில செய்திகள்

மழைநீர் வடிகால் பணிகள்…15 முதல் 30 நாட்களில்… முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்…!!!!!

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியபோது, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகிறது. தென் சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன் அப்போது 70 முதல் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. வடசென்னை பகுதியில் இன்று காலை முதல் பணிகளை பார்வையிட்டேன் அவ்வபோது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றது. மேலும் பெருமழையை எதிர்கொள்ளும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது எப்படிப்பட்ட மழை பெய்தாலும் அதை சமாளிக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. மழை தேங்கினாலும் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |