தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த 13 ரௌடிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள 105 ரவுடிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள். மேலும் பிடியாணை நிலுவையில் இருந்த 15 ரௌடி கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories
தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டை… 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது…!!!!
