Categories
உலக செய்திகள்

சேவை மையத்தில் பயங்கர வெடி விபத்து…. அதிகரிக்கும் சேதம்…. தீவிர நடவடிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

சேவை மையத்தில் ஏற்பட்டுள்ள வெடி விபத்தால் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது.

அயர்லாந்து நாட்டில் கோ டோனஸ்கல் பகுதியில் அமைந்துள்ள சேவை மையத்தில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. என அந்நாட்டின் தேசிய ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அந்த இடங்களில் இருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வெடி விபத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த விபத்தால் அடுக்குமாடி குடியிருப்பின் முக்கிய பகுதிகள் மிகவும் மோசமான அளவுக்கு சேதம் அடைந்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கவுன்சிலர் John O Donnel கூறியதாவது “இது மிகவும் சோகமான நிகழ்வு. இது பலத்த சேதங்களை ஏற்படுத்தி உள்ளது” என அவர் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் SLIGO கடலோர காவல் படை ஹெலிகாப்டர்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |