கடந்த 2014 ஆம் ஆண்டு புரோ கபடி தொடரின் எட்டு சீசங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது சீசன் நேற்று தொடங்குகியது. இந்த ஒன்பதாவது சீசனில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் ஜெயின்ஸ், ஹரியானா ஸ்ரீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டான்ஸ், யூ மும்பா, யுபி யோதாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஆப்-பிலும் ஆன்லைனில் பார்க்கலாம்.
இந்நிலையில் புரோ கபடி லீக் தொடரின் தனது முதல் ஆட்டத்தில் இன்று தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது. இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி குறைவான வெற்றி சதவீதத்தையே வைத்துள்ளது. அதே சமயம் கடந்த முறை பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரர் செராவத், இந்த முறை தலைவாஸ் அணிக்கு விளையாடுவது, சாதகமாக பார்க்கப்படுகிறது.