தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு கடந்த 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் ரகுமான், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீஸ் ஆனதிலிருந்து பல்வேறு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் கூட நடிகர் ஜெயம் ரவிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினார். இதேப்போன்று தற்போது வந்திய தேவனாக நடித்த நடிகர் கார்த்தியை உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளனர். இதன் காரணமாக நடிகர் கார்த்தி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ரஜினி சார் உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நீங்கள் மற்றவர்களுடைய வேலையை பாராட்டுவதால் உங்களுடைய மரியாதை மற்றும் மகிழ்ச்சி அவர்களைச் சென்றடையும். நீங்கள் எங்களுக்கு தரும் இன்பமானது எப்போதும் அன்பு நிறைந்ததாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதேபோன்று மற்றொரு பதிவில், கமல் சார் நீங்கள் எப்போதும் பெரிய இலக்குகளை அடைவதற்கு உறுதுணையாக இருப்பீர்கள். நீங்கள் தான் எங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறீர்கள். ஆனால் இப்படிப்பட்ட தருணங்களில் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்துள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Thank you @ikamalhaasan sir, @rajinikanth sir 🙏 pic.twitter.com/moHVnXdQQn
— Karthi (@Karthi_Offl) October 6, 2022