Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உதவிக்கு அழைத்த இன்ஜினியரிங் மாணவர்….. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமியை வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் 19 வயதுடைய இன்ஜினியரிங் மாணவர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது புல் கட்டுகளை தலையில் தூக்கி விடுவதற்காக மாணவர் சிறுமியை உதவிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அருகில் வந்ததும் மாணவர் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.

Categories

Tech |