உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு விளங்கி வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி போன்ற துறைகளில் உலக அளவில் பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பெல்லாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்டிஸ் க்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் உக்ரைன் மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்டி மற்றும் ரஷ்ய மனித உரிமை அமைப்பான மெமோரியல் போன்ற அமைப்புகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை ஆவணப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக அலெஸ் மற்றும் உக்ரைன் ரஷ்யம் மனித உரிமை அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக 2022 ஆம் வருடத்திற்கான இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் போன்ற துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.