Categories
உலக செய்திகள்

கனடாவை அதிர வைத்த பயங்கர சம்பவம்…. 11 பேரை கொன்றவர் யார்?.. நீடிக்கும் குழப்பம்…!!!

கனடாவில் 11 நபர்களைக் கொன்ற கொடூர சம்பவத்தில் குற்றவாளி குறித்து மர்ம நீடிக்கிறது.

கனடா நாட்டில் கத்தி குத்து தாக்குதலில் 11 நபர்களை இரண்டு சகோதரர்கள் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது ஒரு நபர் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் Saskatchewan என்ற பிராந்தியத்தில் கடந்த மாதம் பயங்கர கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது.

இதனைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட இரண்டு சகோதரர்களில் ஒருவரான  மைல்ஸ் சாண்டர்சன், செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று கைதானார். அதன்பிறகு, அந்த சகோதரர்களில் மற்றொரு நபரான டேமியன் உயிரிழந்து கிடந்தது கண்டறியப்பட்டது. எனவே, அந்த 2 சகோதரர்கள் தான் இந்த பயங்கர கொலையை திட்டமிட்டு செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது டேமியன், 10 நபர்களை கொலை செய்வதற்கு முன்பாக உயிரிழந்தாரா? அல்லது அதற்கு பின் கொல்லப்பட்டாரா? என்று காவல்துறையினர் கூறவில்லை. இதனால், அவர் இந்த கொலைக்கு முன்பே உயிரிழந்திருந்தால், சகோதரர்களில் ஒருவர் மட்டுமே குற்றவாளியாவார். எனவே, இந்த பயங்கர கொலையின் குற்றவாளி யார்? என்பது சரிவர தெரிவிக்கப்படாமல் இருக்கிறது.

Categories

Tech |