ப்ரோ கபடி லீக் 2022 போட்டி இன்று இரவு 7:30 மணி அளவில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது.
ப்ரோ கபடி லீக் 2022 பெங்களூருவில் இன்று இரவு 7:30 மணி அளவில் தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் நாள் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியை உபி யோதாஸ் எதிர்கொள்கிறது. இந்நிலையில் ப்ரோ கபடி லீக் போட்டி ஸ்ரீ கண்டிவரா உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து ஜெய்ப்பூர் பந்தர்ஸ் அணியை ராகுல் சவுதாரி இந்த வருடம் ஏலத்தில் எடுத்துள்ளார். மேலும் புரோ கபடி லீக் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் இல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.