உலக வங்கியானது இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் குறையும் என்று கூறியிருக்கிறது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டம் நடப்பதற்கு முன் தெற்காசிய பொருளாதாரத்திற்கான அறிக்கை நேற்று வெளியானது. அதில் உலகின் பிற நாடுகளை காட்டிலும் இந்தியா நன்றாக மீண்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளை காட்டிலும், குறைவாக கணிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த நிதியாண்டில் இந்திய நாட்டிற்கான ஜிடிபி வளர்ச்சியை இத்துடன் மூன்றாம் தடவையாக உலக வங்கி திருத்தம் செய்திருக்கிறது. தெற்கு ஆசியாவிற்கான உலக வங்கியினுடைய தலைமை பொருளாதார நிபுணராக இருக்கும் ஹான்ஸ் டிம்மர் தெரிவித்ததாவது, கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில் கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா மீண்டு விட்டது.
கடந்த வருடத்தில் இந்திய நாட்டின் பொருளாதாரமானது 8.7%-ஆக வளர்ச்சியடைந்தது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் பலவீனம் அடைந்திருக்கிறது. அதிக வருமானம் பெறும் நாடுகளின் பொருளாதாரத்தில் வளர்ச்சி குறைகிறது. இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு சிறு பகுதி மூலமே வளர்ச்சி இருக்கிறது.
இவ்வாறு சிறு பகுதியின் வளர்ச்சியால் மட்டும் குடும்பங்கள் அனைத்திலும் தகுந்த வளர்ச்சி காண முடியாது. வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.