தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகைக்காக முன்னதாக செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வருகின்ற 24 ஆம் தேதி தீபாவளி வர உள்ளதால் தொடர் விடுமுறைகள் அளிக்க வேண்டி உள்ளது. இடையில் சில நாட்கள் மட்டுமே மீண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. எனவே தீபாவளி வரை தொடர் விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தெலுங்கானா அரசு தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மேலும் நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கானாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 26 ஆம் வரை தசரா விடுமுறை என்று அறிவித்துள்ளது. ஆனால் திட்டமிட்டபடி ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள் அக்டோபர் 9ஆம் தேதி முதல் பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களுக்கு மட்டுமே அக்டோபர் 26 ஆம் தேதி மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வர வேண்டும் என்றும் அக்டோபர் 26 ஆம் தேதி வரை வகுப்புகள் தொடங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்வதற்கு இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர், மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச், மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டாவது சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என்றும் தெலுங்கானா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இது குறித்து இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.