சுஷ்மிதா சென் பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்திருக்கின்றார். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர் 1994 ஆம் வருடம் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றுள்ளார். பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார். தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இந்தியில் அதிக அளவில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். 46 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை ஆனால் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது சுஷ்மிதாசென் வெப் தொடர்களில் நடித்து வருகின்றார். அதன்படி சுஷ்மிதா சமூக ஆர்வலரும் திருநங்கைகளுக்கான குரல் கொடுக்கும் கவுரி சாவந்த் என்னும் திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் தாலி என்னும் வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தொடரை தேசிய விருது பெற்ற ரவிஜாதவ் இயக்கி வருகின்றார். இந்த நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சுஷ்மிதாசென் இந்த அழகான நபரை சித்தரித்து அவரது கதையை உலகிற்கு கொண்டு வந்ததை விட வேறு எதுவும் என்னை பெருமையுடனும் நன்றியுடனும் இருக்க செய்யவில்லை. மேலும் வாழ்வதற்கும் கண்ணியத்துடன் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உள்ளது என குறிப்பிட்டு இருக்கிறார்.