Categories
மாநில செய்திகள்

“ஆதரவற்ற குழந்தைகள் பலி” தனியார் காப்பகத்திற்கு சீல்…. அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி..‌‌.!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் 14 குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலப் பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி உள்ளிட்ட பலர் நேரில் சென்று காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறியதாவது, ஆதரவற்ற குழந்தைகளின் நிலைமையை பார்த்து முதல்வர் மிகவும் வருத்தம் அடைந்தார். இந்த குழந்தைகள் காப்பகம்  மிகவும் மோசமான நிலையில் செயல்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் காப்பாளர் யாருமே இல்லை. இந்த காப்பகத்தின் நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தனமானாலும்‌ 3 சிறுவர்கள் பரிதாபமாக இறந்து விட்டனர். இதனால் தனியார் காப்பகத்தை மூடி சீல் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனியார் காப்பகத்தில் வசிக்கும் அனைத்து குழந்தைகளும் ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்துக்கு மாற்றப்பட்டு பராமரிக்கப்படுவார்கள் என்றார்.

Categories

Tech |