கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு சிம்புவின் ரசிகன்னு சொன்னா பொண்ணுங்க கண்ண மூடிட்டு லவ் பண்ணுவாங்க என சிம்பு கூறியிருக்கிறார்
சில நாட்களாக திரைப்படங்கள் எதிலும் ஈடுபடாமல் இருந்த சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று இரவு பிரபலமான கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று கொண்டு நடனமாடியும் பாட்டுப் பாடியும் மாணவர்களை கவர்ந்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர் ரசிகர்கள் அவருக்கு கொடுத்து வரும் அன்பை பற்றி உருக்கமாக பேசினார்.
அதில், “எனக்கு பட வாய்ப்புகள் வருவதை தடுப்பதற்கு என்றே ஒரு கூட்டம் வேலை பார்த்து வருகிறது. நீங்கள் என் மீது இவ்வளவு அன்பு காட்டினால் அவங்களுக்கு காண்டாகுமே. சிம்புவின் ரசிகன்னு சொன்னா பொண்ணுங்க தைரியமா லவ் பண்ணுவாங்க. ஊரே என்ன கழுவிக் கழுவி ஊத்தும் போது என் தலைவன் வருவான்னு எனக்கு ஆதரவா நிக்கிறவன் அவன கட்டுன பொண்டாட்டிக்கும் உண்மையா லவ் பண்ற பொண்ணுகாகவும் எந்த அளவுக்கு நிற்பான் யோசிங்க” எனக் கூறியுள்ளார்.