நடிகை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் பிரிவிற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலை செய்து வந்தனர். இதன் பிறகு இவர்களுடைய இரண்டு குடும்பத்தினரும் மீண்டும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது ரஜினி குழந்தைகளுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் அவரின் பேச்சைக் கேட்டு தனுஷ் மனம் மாறி ஐஸ்வர்யா உடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு வீட்டாராம் மகிழ்ச்சியோடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது