Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்..7)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

சென்னை

சென்னையில் இன்று (07.10.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தி.நகர் பகுதி: ஆர்.ஆர்.காலனி அசோக் நகர் பகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை, ஜோதியம்மாள் நகர், ஏரிக்கரை தெரு, ஜாபர்கான்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உப மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான மந்திக்குளம், செங்கல்பட்டை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன் பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்கள் மற்றும் குளத்தூர் உப மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான கீழ வைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர், அதனை சுற்றியுள்ள ஊர்கள். அதேபோல் சூரங்குடி உப மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான மேல்மாந்தை, இ. வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில்

மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்பதைஊரக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலம் துணை மின் நிலை பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி அம்மன்கோவில்பட்டி சருகுவலையப்பட்டி, வடக்குவலையப்பட்டி, கீழவளவு, இ. மலம்பட்டி, உடன்பட்டி, கொங்கம்பட்டி, கரையிப்பட்டி செம்மணிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

மதுரை சமயநல்லூர் துணை மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் தடைபடும். இதனால் குறவன்குளம், முடிவார்பட்டி, ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மலைப்பட்டி, தேசிய சர்க்கரை ஆலை பகுதிகள், பண்ணைகுடி, மேட்டுப்பட்டி தச்சம்பத்து, வாட்டர் பம்ப் நிலையம், இரும்பாடி குரூப், சமயநல்லூர் மெயின் ரோடு, கோவலன் நகர், வி. எம். டி. நகர், வளர்நகர், செக்கடி தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம் , மோளையனூர் , பையர்நத்தம் , தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிபேட்டை, மஞ்சவாடி, புதுப்பட்டி , ஏ. பள்ளிப்பட்டி , அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை ஒன்பது மணிமுதல் மதியம் ஒரு மணிவரை கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.சேவல்பட்டி, தாதம்பட்டி, சூலக்கரை, மாத்தி நாயக்கன்பட்டி, கூரைக்குண்டு, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

ராமநாதபுரம்

ராமநாதபுர மாவட்டத்திலுள்ள கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரையிலும் இன்று (அக்.07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பசும்பொன், பாா்த்திபனூா், அபிராமம், முதுகுளத்தூர், பேரையூர், கமுதி நகர், மண்டலமாணிக்கம், செங்கப்படை, கீழராமநதி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று (அக்.07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |