தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார். தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் ரஷ்மிகா மந்தனாவின் அடுத்த தமிழ் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கார்த்திக் உடன் மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ராஜு முருகன் இயக்கப் போகிறாராம். மேலும் கார்த்திக் மற்றும் ராஷ்மிகா நடிக்கும் பதியப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தின் இறுதியில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.