மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடித்த ஜகமே தந்திரம், கேப்டன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தற்போது இவர் ட்ரிப்பிள்ஸ் வெப் தொடரின் இயக்குனர் சாருக்கே சேகர் இயக்கத்தில் அம்மு என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்திருக்கின்ற இந்த படத்தில் நவீன் சந்திரா, பாபி சிம்ஹா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் அம்மு திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியாக இருக்கிறது இதனை பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.