அடர்ந்த காட்டுக்குள் ஒரு நாளில் நடக்கும் பரபர சர்வைவல் திரில்லர் திரைப்படமாக பருந்தாகுது ஊர்க்கருவி திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குனர் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பருந்தாகுது ஊர்க்கருவி. இத்திரைப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிக்க காயத்ரி ஐயர் ஹீரோயினாக நடிக்கின்றார். சர்வைவல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கும் இத்திரைப்படத்தில் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். லைட்ஸ் ஆன் மீடியா தயாரிக்கும் இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் கூறியுள்ளதாவது, “கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதையாகும். காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடம் இருந்து தப்பித்தார்களா என்பதை ஒருநாளுக்குள் நடக்கும் நிகழ்வாக கூறுகின்றோம். இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை உருவாக்கி இருக்கின்றோம். ஊட்டி முதுமலை காடுகளில் படமாக்கி இருக்கின்றோம். மாறுபட்ட ஒரு பரபரப்பான திரில் பயணமாக இத்திரைப்படம் இருக்கும் எனக் கூறியுள்ளார்.