Categories
மாநில செய்திகள்

ஒரு நாளைக்கு176.84 கோடி பெண்கள் “அரசு பேருந்தில் பயணம்”….. போக்குவரத்து துறை தகவல்….!!!!

ஒரு நாளைக்கு சராசரியாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் விவரத்தை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

நமது தமிழகத்தில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தார். அதில் முக்கியமானது  மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5  திட்டங்களை அறிவித்தார். அதேபோல் வெறுப்பேற்றவுடன் 5  திட்டங்களுக்கும் கையெழுத்திட்டு தற்போது ஒன்றன் பின் ஒன்றாக  நிறைவேற்றி வருகிறார். அதில் முக்கியமான திட்டம் மகளிருக்கு  இலவச பயணத் திட்டம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 1 ஆண்டு  நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இத்திட்டம்  எதிர்க்கட்சியினர் செய்த விமர்சனங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பெண்களிடம்  பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயணம் செய்த பெண்களின்  விவரங்களை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் 176 கோடியே 84 லட்சம் பெண்களும், 10.01 லட்சம் திருநங்கைகளும், 129.10 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயணம் செய்துள்ளனர். மேலும் அதே பேருந்தில் கட்டணம் செலுத்தி 102 கோடியே  83 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து ஒரு நாளைக்கு சராசரியாக இத்திட்டத்தின் மூலம் 39 .21 லட்சம் பெண்கள் பயணம் செய்வதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |