தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஒருவர் செலுத்தி இருக்கும் தொகைக்கு வட்டி வரம்பு வைக்கப்படாமல் இருந்தால் அதற்கு காரணம் என்ன என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதாவது ஒருவரது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி எப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படவில்லை என்றால் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என அர்த்தம் ஆகுமே தவிர யாருக்கும் வட்டி வரவு வைக்கப்படாமல் இருக்காது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எந்த பயனாளருக்கும் பிஎப் வட்டி வரவு வைக்கப்படாமல் விடுபடாது.
மேலும் அனைத்து pf பணியாளர்களுக்கும் உறுதியாக வட்டி வர வைக்கப்பட்டுவிடும். ஒருவேளை உங்கள் பிஎஃப் கணக்கு அறிக்கையில் வரவு வைக்கபடாவிட்டால் பிஎஃப் கொண்டு வந்த மென்பொருள் பதிவேற்றப்படாமல் இருக்கலாம் என ட்விட்டரில் கூறப்பட்டிருக்கிறது. ஆரின் கேபிடல் நிர்வாகியும் இன்போசிஸ் முன்னால் இயக்குனருமான மோகன்தாஸ் பாய் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அன்பு கூறிய இபிஎப்ஓ எங்கே எனது வட்டி என கேள்வி எழுப்பியதோடு பிரதமர் மோடிக்கும் ட்விட்டர் பதிவை டேக்ஸ் செய்து உடனடியாக மாற்றம் தேவை என வலியுறுத்தி இருந்தார். அது மட்டுமல்லாமல் இவ்வாறு வட்டி வரவு வைக்க படாவிட்டால் ஒருவர் மே மாதத்தில் ஓய்வு பெறுகின்றார் என்றால் அவருக்கு எந்த தொகை கிடைக்கும் அதன் பின் அவருக்கு வட்டி செலுத்தப்படுமா? என மோகன்தாஸ் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மதிய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து இருக்கிறது.