நகராட்சி அதிகாரி துப்புரவு பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சியில் காசி என்பவர் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காசி முறையாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் ஆயக்குடி பகுதியில் காசி இறைச்சி கடை நடத்தி வருவதாகவும் பல்வேறு புகார்கள் வந்தது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் கமலா காசியை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.