திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டியில் அன்புச்செல்வன்(28) விஜயலட்சுமி(26)- தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாய் பிரதிக்ஷா(4) என்ற மகளும்,பிறந்து 3 மாதமேயான குருசாவிதா என்ற குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பு செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து செம்பட்டி-வத்தலகுண்டு சாலையில் பாளையங்கோட்டை பிரிவு பகுதியில் சென்ற போது தேனி நோக்கி வேகமாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.