Categories
உலக செய்திகள்

கொரோனாக்கு பயந்து….. இப்படியா ? செய்வீங்க…. செத்துடாதீங்க…. தம்பதிகளுக்கு அட்வைஸ் …!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து தங்களை பாதுகாத்துக் கொண்ட தம்பதிகள் தங்களை காத்துக் கொண்ட போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

உலகமே பயந்து கொண்டு இருக்கும் வார்த்தை கொரோனா. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க வைத்துள்ளது. இதன் பாதிப்பால்  நேற்று முன்தினம் வரை சீனாவில் 2,345 உயிரிழந்துள்ளனர். 76,288 பேர் கொரோனா பாதிப்புக்குட்பட்டு 11,477 பேர் கவலை கிடமாக இருப்பதாக சீன மருத்துவ வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் தென்கொரியா , இத்தாலியில்  இருவரும் பலியாகியுள்ளனர். இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் மரண பயத்தில் இருந்து வருகின்றனர்.  சிலர் கொரோனாவுக்கு பயந்து மரணத்துடன் விளையாடவும் செய்கின்றனர். அப்படி ஆஸ்திரேலிய தம்பதி செய்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்த அந்த தம்பதிகள் உடல் முழுவதையும் பிளாஸ்டிக்கால் சுற்றிக் கொண்டு விமானத்தில் பயணம் செய்த போட்டோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டடித்து வருகின்றது. மூச்சு திணறி இறந்து விட்டால் என்ன ? செய்வீர்கள் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |